நவீன யுகத்தில் இணையத்தின் வளர்ச்சியில் தகவல்கள் மலிந்து போனதால் உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் கண்ணில் பட்டவைகள், காதில் கேட்டவைகள் அனைத்தையும் அள்ளிப்போட்டு அடுத்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஆபத்தான நிலை இன்று உருவாகியுள்ளது.
இன்று உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை விடுவிக்கும் முன்னர் இந்த போலியான வதந்திகளை விட்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் என உலக சுகாதார நிலையம் தொடக்கம் Facebook மற்றும் வாட்சப் நிறுவனம் உட்பட பல உலக நாடுகள் முயட்சித்துக் கொண்டிருக்கின்றன.
உங்களிடம் வரும் தகவல் உண்மையானதா? உறுதி செய்வது உங்கள் கடமை !! தகவலை உண்மையானதா என்று உறுதி செய்வது எப்படி என்று இந்நிகழ்ச்சியில் முடியுமானவரை தெளிவுபடுத்துகிறோம்.
#KVC #Kuchchaveli #Kuchchaveli.com #News #Fake #Trincomalee #Information #Validation #Facebook #WhatsApp