கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் கூறியதாவது கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்புகளை எதிர் நோக்கி இருக்கின்ற மக்கள் 0777-134053, 0777-472331, 0779-540500 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இதன்போது எம்மால் முடிந்தளவு உதவிகள் செய்வதோடு அதற்குரிய தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.