ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு வாலிபர் ஒருவரை கடத்தியது தொடர்பில் நீதி மன்ற பிடியாணை பிரப்பிக்கப்பட்டது.

ஹிருணிகா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் ஹிருணிகா ஆஜர் ஆகாததை அடுத்து நீதிமன்றத்தினால் பிடிஆனை பிரப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கில் ஹிருணிகாவின் பிணையாளர்களை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

கடந்த 2015 டிசம்பர் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து அமில பிரியந்த அமரசிங்க எனும் நபரை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மெய்ப்பாதுகாவலர்கள், அவருக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில் வைத்து கடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில், 29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது சாட்டப்பட்ட குற்றங்களை அவர் ஏற்க மறுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்ந்து இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply