இலங்கையில் அதிகரித்து வரும் பண மோசடியை குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கையாக ஒரு குழுவை நியமித்துள்ளது.

இந்த நடவடிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் எடுத்துள்ளார்.

நாட்டில் நிலவியுள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள்:

  • தலைவர்: ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர.
  • இலங்கை மத்திய வங்கியின் சட்டத்துறை பணிப்பாளர் கே.ஜி.பி.சிறிகுமார.
  • மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் பிரிவின் பணிப்பாளர் ஜே.பி.கம்லத் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

Leave a Reply