இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் வளர்த்து வருகிறார்கள்.
இந்த பெற்றோர்களில் சில பெற்றோர்கள் பிள்ளைகளை சிறிய வயதிலேயே வேலைக்கு சேர்த்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் 16வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இந்த சட்டம் ஜூன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைய கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தும் ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டம். இன்னும் சில தொழில்சார் சட்டங்களிலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.