இலங்கையில் சம காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுச் சுகாதார பிரிவு அறிவித்தல் விடுத்தால் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்களுக்குக் நாம் கோரிக்கை விடுக்கிறோம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர்களின் வீடுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார.

Leave a Reply