இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆகும்.

இவர்களில் 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இதன் பிரகாரம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 95 தசம் ஏழு ஆறு சதவீதத்தைத் தாண்டுகிறது. உலக அளவில் கொவிட் தொற்றி குணமடைவோர் வீதம் சிறப்பாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்று 334 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பிரகாரம் திவுலப்பிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை கொவிட் கொத்தணிகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்தது 714 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை ,இன்றைய (08) தினம் மேலும் 5 கொரோனா மரணங்கள் இடம்பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனுராதபுரம், ஹெம்மாத்தகம, தர்காநகர், வெள்ளவத்தைஇ ஜா-எல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். மரணமானவர்களில் 4 பேர் பெண்கள்.

By Admin

Leave a Reply