இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் பயனுள்ள பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் வைத்தியசாலையில் (கிளினிக்) மருத்துவ சேவையை காணொளி மூலம் நடைமுறை படுத்துவதற்கான திட்டம் நேற்று ரிச்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பமானது.

இதில் முதல் கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய தொலைபேசியில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.

இந்தச் சேவையானது வெளிநோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருகை தரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த சேவையின் ஊடாக நோயாளர்கள் வீட்டில் இருந்தவாறே சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும் இதற்காக விசேட நடமாடும் வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கு அமைய சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

மேலும் கையடக்க தொலைபேசியில் oDoc app ஐ தரவிறக்கம் செய்வதின் மூலம், அல்லது 0770773333 இந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply