இலங்கையில் சமகாலமாக போதைப் பொருட்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பாவித்து வருகின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் கடந்த 7 மாதங்களில் மாத்திரம் 44 ஆயிரம் பேர்கள் போதைப் பொருட்கள் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக வேண்டி சட்டங்களை இறுக்கமாக்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் சட்டத்தை இறுக்கமாக்குவதின் காரணமாக போதைப்பொருட்களற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதுதான் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply