கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது.
உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம், இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்று மாலை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த சந்திப்பில் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் கூறியதாவது இலங்கையும் – உலக வங்கியும் பல வருடங்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை விரைவில் கட்டுப்படுத்த இலங்கையால் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.