இந்த பாராளுமன்ற கன்னி கூட்டம் (2020.11.04) கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் முதலாவதாக கருத்து தெரிவித்த கௌரவ சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற பேரவைக்கு நியமிக்கப்பட்ட அனைவரையும் கௌரவத்துடன் வரவேற்றதுடன், எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
அதனை தொடந்து பொதுச் செயலாளர் திரு.தம்மிக தசநாயக்க அவர்கள் 20ஆவது திருத்தத்திற்கமைய பாராளுமன்ற பேரவையின் சட்ட கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளை விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டார். இக்கலந்துரையாடலில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற பேரவையின் உறுப்பினர்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம், பாராளுமன்ற பொதுச் செயலாளர் திரு.தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி பொதுச் செயலாளர் திரு.நீல் இத்தவெல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.