நிலம் சேறாகும் போது எவ்வாறு மழை பயனளிப்பதில்லையோ…
அதுபோல் உள்ளம் கல்லாகும் போது ( மார்க்க) போதனைகள் பயனளிப்பதில்லை…
இறை போதனையும் மார்க்க உபதேசமும் உச்சபட்சமானவை. அவற்றுக்கு கட்டுப்பட்டு திருந்தவில்லையாயின்… அதன் விளைவு :
“இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடுதான்.அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள். (ஸுமர்- 22)
அல்லாஹ்வை பயந்து கொள்வோம்…
இப்போதைய கொரோனாவின் பேராபத்தான நிலையிலும் கூட
மார்க்க உபதேசங்களுக்கும், போதனைகளுக்கும் பயப்படாது , அதற்கும் திருந்தாது, நாட்டு சட்டத்தையும் மதிக்காது நடப்பவர்கள் எதற்கு எப்போது அஞ்சப்போகிறார்கள், கட்டுப்படப்போகிறார்கள் ?
இந்த சந்தர்ப்பத்திலாவது இறுகிய எம் உள்ளங்களை ஈமானின் மூலம் கொரோனாவின் தாக்கத்திலிருந்து எம்மை காக்க வீட்டில் தரித்திருத்தல், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல், போன்ற சுகாதார வழிகாட்டல்களையும் எடுத்து நடப்போம். இப்போதைக்கு தேவையற்ற அரசியல் பதிவுகளை தவிர்ப்போம்.
உலக நாடுகள் கொரோனாவினால் அபாயத்தை சந்தித்து கொண்டிருக்கின்றன. சில நாடுகள் மிகப்பெரும் அச்சத்திலும் ஆபத்திலும் இருக்கின்றன. அந்நாடுகளை அந்த அவலத்திலிருந்து காப்பதுடன் எங்களுக்கும் அவ்வாறான நிலமை வராமல் பாதுகாப்பாயாக யா ரஹ்மானே.
உன் அருளும் கருணையும் விசாலமானது மிகப்பெரியது.
ஆக்கம்: உம்மு மிஸால் அப்ரார்