நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த அர்பணிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் நுவரெலியாவிலுள்ள தமக்கு சொந்தமான 180.2 பேர்ச்சஸ் காணித்துண்டை விடுமுறை நாட்களில் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து வியாழக்கிழமை (25) கையளித்தார்.

கந்தபொலை கோர்ட் லாட்ஜ் தோட்டத்தில் பகுதியில் வசிக்கும் திரு தொன் பேர்னார்ட் அலோசியஸ் குருகுலாதித்தியா மற்றும் திருமதி லாலனி பெட்ரியஸ் குருகுலாதித்தியா, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் காணியை நன்கொடையாக வழங்குவதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டனர்.

திரு தொன் பெர்னார்ட் அலோசியஸ் குருகுலதித்தியா தனது மூதாதையர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுள்ளதுடன், பிரித்தானிய காலனித்துவ காலங்களில் பெறப்பட்ட காணிகள் என நன்கொடையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையிடமிருந்து கிடைத்த பரிசை தனது கடின உழைப்பினால் பாதுகாத்து வந்த நன்கொடையாளர்கள் இராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் இந்த காணியை கையளித்தமைக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்கொடை வழங்கிய தம்மபதியிடம் நன்றிகளை கூறிக்கொண்டதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இராணுவ நிர்வாகம் மற்றும் விடுதி பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த ஹெரத், பிரிகேடியர் சரத் தென்னகோன், 3 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By : Government news

By Admin

Leave a Reply