உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது போல இணையதள பாவனையும் அதிகரித்து வருகிறது.
இந்த காலத்தில் இணையத்தில் பல நபர்கள் பல்வேறு வகையான விடயங்களில் ஈடு பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் சில நபர்கள் அதையும் hack பன்னி மக்களை கஷ்டத்தில் தள்ளி விடுகிறார்கள்.
அதே மாதிரி இலங்கையில் அரச இரண்டு இணையதளத்தையும் முடக்கி விட்டார்கள்.
பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது என்று இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.
இது குறித்து விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது.