சமகாலத்தில் இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் மக்களிளை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல விளையாட்டு போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. அந்த போட்டிகள் நடைபெறாத சந்தர்ப்பத்தில் அந்தந்த நாடுகளுக்கு பொருளாதாரத்தில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் வருகின்ற ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் (2021) ஜனவரி மாதம் வரை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்றது.

இந்த தொடரில் மூன்று T20 போட்டிகளும், மூன்று ஒரு நாள் போட்டிகளும், நான்கு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற இருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டியை ஐந்து டெஸ்ட் போட்டிகளாக மாற்ற இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பரிசீலனை செய்து வருகின்றன என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் நேற்று தெரிவித்தார்.

Leave a Reply