இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் (பாகிஸ்தான், சீனா, நேபாளம்) பிரச்சினை இடம்பெற்ற நிலையில் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சீனா தரப்புடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறியிருந்தார்.

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா மற்றும் சீனா படைகள் இடையே மோதல் நடந்துள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்களின் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply