உலகமெங்கும் மக்களின் பொழுதுபோக்குக்காக வேண்டி கையடக்கத் தொலைபேசியில் பல செயலிகள் (Software) உள்ளன.
அதிலும் மிகப் பிரபல்யமான ஒரு செயலியாக (software) டிக் டாக் (Tiktok) அமைந்துள்ளது.
இந்த டிக் டாக் இந்தியாவில் மிகவும் ஒரு சர்ச்சைக்குரிய ஒரு செயலியாக இருந்தாலும் இதைத்தான் மக்கள் விரும்பி அவர்களுடைய நேரத்தை பொழுதுபோக்கி வருகிறார்கள்.
இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு போட்டியாக சிங்காரி என்ற செயலியை பெங்களூரைச் சேர்ந்த பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினர். மேலும் இந்த சிங்காரி செயலியில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் கொரோனா விவகாரம் தொடங்கியதில் இருந்து சீன பொருட்களை தவிர்த்து இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் ‘சிங்காரி’ செயலிக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாணோர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.