உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்
துர்க்மேனிஸ்தான்
தாஜிகிஸ்தான்
யேமன்
கொமரூஸ்
கிரிபதி
லெசதோ
மலாவி
மாஷல் தீவு
மைக்ரோசியா
நாவுரு
வடகொரியா
பலாவு
சேமோவா
வனவாடு
சாஹோ தோமோ
பிரின்சிபே
சொலமன் தீவுகள்
தென் சூடான்
டொங்கா
துவாலு
போன்ற நாடுகளில் நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களை பயன்படுத்தி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வடகொரியா தொடர்பான புள்ளிவிபரங்களில் சிக்கல்கள் இருப்பதாக விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply