அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நாளை காலை 09 மணி தொடக்கம் மாலை 05:00 மணி வரை சகல மருந்தகங்களும் திறக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலத்திலும் திறக்கப்படல் வேண்டும்.
அதே போன்று இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் மரமஞ்சள் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் ஆயுர்வேத முறையில் சிகிச்சைகளைப் பெறும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருத்துகளையம் அஞ்சல் சேவை மூலம் வழங்க வழியேற்படுத்தி கொடுத்தல் வேண்டும் எனவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.