முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அரிசி இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, லங்கா சதொஷவுக்கு, அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இன்று 20/06/20202 பி.ப. 11:30 மணியளவில் அமைச்சர் முன்னிலையாகியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.