நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கூறியிருந்தார்.
ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கூறியதாவது :
ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர் ஒருவர்க்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டபோது, அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், நாட்டின் தற்போதைய நிலையை தவிர்த்திருக்கலாமென்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கே முன்னுரிமை வழங்கி, ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை, நாட்டை முடக்காமல் இருந்தது பெரும் குற்றமென்றும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி குற்றம் சாட்டினார்.