இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (27) அவரது இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அத்துடன் செந்தில் தொண்டமான் உட்பட அங்கிருந்த ஏனையோருடனும் தனது அனுதாபத்தை பகிர்ந்துகொண்டார்.